01

E   |   සි   |  

 திகதி: 2018-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0383/2018: Housing for Estate Workers

383/ '18

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பெருந்தோட்டங்களில் வசிக்கின்ற சுமார் 08 இலட்சம் தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் இற்றைவரை 10x12 அடிகளைக் கொண்ட லயன் அறைகளில் வாழ்கின்றனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) இவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கமைய 2014.12.31 ஆம் திகதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி (ii) இல் குறிப்பிட்டுள்ள வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டங்கள் மற்றும் மாவட்டங்கள் யாவையென்பதையும்;

(iv) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இக் கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

(v) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டு மற்றும் மாவட்டத்துக்கமைய தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(vi) பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களுக்கு முன்னைய அரசாங்கங்களால் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிகை யாதென்பதையும்;

(vii) மேற்படி வீட்டுப் பிரச்சினையை முழுமையாக தீர்த்துவைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;

(viii) மேற்படி வேலைத்திட்டம் பற்றிய தகவல்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-19

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks