01

E   |   සි   |  

 திகதி: 2017-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1367/2017: புன்னைநீராவி கிராமம் :அடிப்படை வசதிகள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின், புனானை நீராம் கிராமத்தில் தற்சமயம் 1837 குடும்பங்கள் வசிக்கின்றனவென்பதையும்;

(ii) மேற்படி குடும்பங்களில், 780 குடும்பங்களுக்கு இற்றைவரையில் நிரந்தர வீடுகள் கிடைக்கவில்லையென்பதுடன், 391 குடும்பங்கள் பெண்களை குடும்பத்தலைவர்களாக கொண்ட குடும்பங்களாகும் என்பதையும்;

(iii) மேற்படி கிராமங்களுக்கு அநேகமான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதென்பதையும்;

(iv) அநேகமான கிராமவாசிகளுக்கு காணி உரிமப்பத்திரங்கள் இன்மை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதென்பதையும்;

(v) குறிப்பாக பெண்களை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இம்மக்களின் மேற்படி தேவைப்பாடுகள் தொடர்பில் இற்றைவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின், அவை ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் முடிவுறுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

(iii) இற்றைவரையில், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனில், இப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-07

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

 (அ)   (i)        ஆம்.

          (ii)       ஆம்.

          (iii)      ஆம்.

          (iv)      ஆம்.

          (v)       ஆம்.

(ஆ)    (i)      மற்றும் (ii)

                     கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள புன்னைநீராவி கிராம சேவையாளர் பிரிவில் 1,800 குடும்பங்கள் மீளக்குடியேறி வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு 2016ஆம் ஆண்டுவரை 1,031 வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

புன்னைநீராவி கிராம சேவையாளர் பிரிவில் 2016ஆம் ஆண்டு எனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களில் ஒன்றான வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் 278 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாழ்வாதார உதவித் திட்டத்தின்கீழ் உதவி பெற்ற குடும்பங்களில் 118 குடும்பங்கள் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் ஆகும்.

புன்னைநீராவி கிராம சேவையாளர் பிரிவில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், 2016ஆம் ஆண்டு வரையும் பல உட்கட்டமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் வீதிகள் புனரமைப்புச் செய்யப் பட்டிருக்கின்றன. அத்தோடு, கல்லாறு பிரதான வீதியின் பாலம், உழவனூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலம் என்பன புனரமைப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் கண்ணகிநகர், புன்னைநீராவி, குமார சாமிபுரம் மற்றும் உழவனூர் கிராமங்களின் பொதுநோக்கு மண்டபங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. இப்பிரிவில் அமைந் துள்ள கறுக்காய்க்குளம் புனரமைப்புச் செய்யப் பட்டிருக்கின்றது. இப்பிரதேசத்தில் மின்சார இணைப்புக்கள் 96 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.

2017ஆம் ஆண்டு உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்களின் கீழ் கல்லாறு பிரதான வீதி, புன்னைநீராவி - பிரமந்தனாறு பிரதான வீதி, குமாரசாமிபுரம் பிரதான வீதி, உப்புக்குளம் வீதி என்பன புனரமைப்புக்காகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளன.

     (iii)  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. 

(இ) ஏற்புடையதல்ல.

பதில் தேதி

2017-06-07

பதில் அளித்தார்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks