01

E   |   සි   |  

 திகதி: 2016-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0979/2016: LTTE cadres in custody or rehabilitated after 2009

979/16

கௌரவ அனுர திசாநாயக்க,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2009 ஆம் ஆண்டு மே மாதம் வடக்கு, கிழக்கில் யுத்த நிலைமை முடிவுற்றதன் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. அங்கத்தவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த எல்.ரீ.ரீ.ஈ. அங்கத்தவர்களில் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. தடுப்புக் கைதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) அவர்கள் ரிமாண்ட் சிறைக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள காலப்பகுதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) ஒரு வருடத்திற்கும் மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த ரிமாண்ட் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) மேற்படி ஆ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் எண்ணிக்கை, ரிமாண்டில் உள்ள காலப் பகுதியின் பிரகாரம் தனித்தனியாக எத்தனையென்பதையும்;

(iii) 07 வருடங்களுக்கும் அதிகமான காலம் ரிமாண்ட் சிறைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள, எல்.ரீ.ரீ.ஈ தடுப்புக் கைதிகள் அல்லாத கைதிகள் உள்ளனரா என்பதையும்;

(iv) ஆமெனில், அந்த எண்ணிக்கை யாதென்பதையும்;

(v) நீண்ட காலமாக ரிமாண்ட சிறைச்சாலைகளில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-26

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks