01

E   |   සි   |  

 திகதி: 2016-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0894/2016: Land for Mr. W.K.Thilakatatne

894/ '16

 

கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தெனியாய, பல்லேகம, களுகஸ்வத்த எனும் இடத்தைச் சோ்ந்த திரு. டபிள்யு. கே. திலகரட்ண என்பவர் நீண்ட காலத்திற்கு முன் புடவைக் கைத்தொழில் திணைக்களத்தினால் கைத்தறி நிலையமாக உபயோகிக்கப்பட்டிருந்ததும் இடிந்துவிழும் அபாய நிலையிலுமுள்ள பழைய கட்டிடமொன்றில் தனது குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதையும்;

(ii) திரு. திலகரட்ண என்பவரின் மூதாதையர் வழிவந்த இல்லம் மண்சரிவினால் அதிகளவு பாதிப்படையக் கூடியதென புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் இனங்காணப்பட்டிருப்பதன் காரணமாக பல்லேகம வடக்கு கிராம அலுவலரின் விதப்புரையின் பிரகாரம் கொட்டபொல பிரதேச செயலாளரினால் இந்தக் கட்டிடம் வதிவதற்காக அவரின் குடும்பத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கு இந்த காணியை திரு. திலகரட்ண என்பவருக்கு வழங்குவதற்கோ இன்றேல், வீடொன்றை நிர்மாணிப்பதற்கு ஏதேனும் வேறு பொருத்தமான காணியை வழங்குவதற்கோ தேவையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) அவ்வாறெனில், எப்போது என்பதையும்;

அவர் இச்சபையில் தொிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-10-07

கேட்டவர்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks