பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
513/ ’16 கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கடந்த 15 வருடங்களாக தேயிலை, இறப்பர் ஆகியவற்றின் விலைகள் மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளன என்பதையும்; (ii) மொத்த தேயிலை ஏற்றுமதியில் 80% இற்கு தேயிலை சிறுபற்று நில உரிமையாளர்களே பொறுப்பாகத் திகழ்கின்றனர் என்பதையும், கடந்த 06 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருவாய் 21% வீழ்ச்சி கண்டுள்ளது என்பதையும்; (iii) இந்த நடவடிக்கையில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக சில தேயிலை சிறுபற்று நில உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தியை கைவிட்டுள்ளனர் என்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஆ) (i) அண்மைய தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் ஒரு கிலோ தேயிலை கொளுந்திற்கு ரூபா 90/- உம் ஒரு கீலோ சீற் இறப்பரிற்கு ரூபா 350/- உம் அரசாங்கம் செலுத்துமா என்பதையும்; (ii) இந்தக் கைத்தொழில்களைப் பாதுகாக்கும் நோக்குடன் தேயிலை சிறுபற்று நில உரிமையாளர்களது காணிகளை பிணையுறுதியாக வைத்துக்கொண்டு, சாதாரண வட்டி வீதத்தில் 10 வருடக் காலப் பகுதியினுள் கழிக்கக் கூடியவாறு, ஒரு ஹெக்டயர் காணிக்கு ஒரு மில்லியன் ரூபாயை நீண்ட கால சலுகை அடிப்படையிலான கடனாக வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமா என்பதையும் அவர் இச் சபையில் தெரிவிப்பாராரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-07
கேட்டவர்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks