01

E   |   සි   |  

 திகதி: 2016-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0512/2016: Reducing Petroleum prices

512/ '16

 

கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இன்றைய நாட்களில் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மிகவும் குறைந்துள்ளன என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) தற்போது மிகக் குறைந்த விலையில் மசகு எண்ணெய் கிடைப்பதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நியாயமான இலாப எல்லையுடன் ஒரு லீற்றர் டீசலை ரூபா 31.00 இற்கும் ஒரு லீற்றர் பெற்றோலை ரூபா 52.00 இற்கும் நுகர்வோருக்கு வழங்க முடியுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) கடந்த தோ்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானிக்கும் திகதியையும்;

(ii) மசகு எண்ணெய்க்கான விலை இவ்வாறு வரலாற்றில் ஆகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு எதிர்பார்க்கப்படும் விலைக் குறைப்பு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-05-19

கேட்டவர்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks