01

E   |   සි   |  

 திகதி: 2015-12-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0265/2015: National Executive Committee after Jan 08 2015

265/ '15

 

கெளரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு சனவரி 08 ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சிப் பீடமேறிய அரசாங்கம் தேசிய நிறைவேற்றுச் சபையொன்றை அமைத்ததென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) தேசிய நிறைவேற்றுச் சபையின் நோக்கங்கள் யாவை என்பதையும்;

(iii) அதன் உறுப்பினர்களது பெயர்கள் யாவை என்பதையும்;

(iv) இவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள் என்பதையும்;

(v) குறித்த நியமனங்களின் நியமன அதிகாரி யார் என்பதையும்;

(vi) மேற்படி உறுப்பினர்களின் நியமனம் அரசியலமைப்பு அல்லது நாட்டில் வலுவிலுள்ள எச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) தேசிய நிறைவேற்றுச் சபை கூடிய தடவைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) குறித்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாவை என்பதையும்;

(iii) தேசிய நிறைவேற்றுச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி நிறைவேற்றுச் சபை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) எவரேனும் பிரஜையை கைதுசெய்யுமாறு பொலிசாருக்கு கட்டளையிட தேசிய நிறைவேற்றுச் சபைக்கு அதிகாரம் உள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அது எச்சட்டத்தின் கீழ் என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) தேசிய நிறைவேற்றுச் சபையானது அரசியல் தலைவர்களை அவமதிப்பதற்கென அமைக்கப்பட்ட சட்டவிரோத அரசியல் கருவியென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-19

கேட்டவர்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks