01

E   |   සි   |  

 திகதி: 2010-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0277/2010: Creer guidance and welfare of Migrant workers

0277/ ‘10

கெளரவ ஆர். யோகராஜன்,— இளைஞர் விவகார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனோம்புகை போன்ற விடயங்கள் வர்த்தமானியில் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் பிரசுரிக்கப்பட்டுள்ளதையும்,

(ii) மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளைக் கையாளும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளிவிவகார அமைச்சின் கீழ் வரும் ஒரு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளதையும்

அவர் அறிவாரா?

(ஆ) இந்த  நிறுவனம் இன்றி, அமைச்சினால்,

(i) வெளிநாட்டு வேலை வாய்ப்புச் செயற்பாடுகளைப் போதிய அளவிற்குக் கையாள முடியுமா என்பதையும்,

(ii) வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கான தொழில் வழிகாட்டல் செயற்பாட்டினை போதிய அளவிற்கு நிறைவேற்ற முடியுமா என்பதையும்,

(iii) புலம்பெயர் தொழிலாளர்களின் நலனோம்புகையினைப் போதிய அளவிற்குக் கவனிக்க முடியுமா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல் , இதற்கான ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-09-23

கேட்டவர்

கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

இளைஞர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks