01

E   |   සි   |  

 திகதி: 2023-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0816/2023: Details with regard May 9th incident

816/2023

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2022.05.09 ஆம் திகதி இலங்கையில் நடந்த கலவரச் சம்பவத்தின்போது, தமது கடமைகளைத் தவறவிட்டிருந்த பொலிஸ் அலுவலர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பதவி வாரியாக தனித் தனியாக யாது என்பதையும்;

(ii) அந்த அலுவலர்களுக்கு எதிராக எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

(iii) மேற்படி திகதியிலும் அதனை அண்மித்த சில மாதங்களிலும், பிரதிப் பொலிஸ் பதிசோதகர் தலைமையதிபதி ஒருவர் உட்பட சில பொலிசு அலுவலர்களை பகிரங்கமாக துன்புறுத்தியும், கடமைகளுக்கு இடையூறு விளைவித்தும் ஆவேசத்துடன் செயற்பட்ட நபர்கள் இருப்பதை அறிவாரா என்பதையும்;

(iv) இன்றளவில் அந்நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனரா என்பதையும்;

(v) அவ்வாறாயின், இவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2022.05.09ஆம் திகதி நடந்த கலவரச் சம்பவத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அறிவாரா என்பதையும்;

(ii) அந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனரா என்பதையும்;

(iii) அவ்வாறாயின், அந்நபர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) இவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-22

கேட்டவர்

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks