01

E   |   සි   |  

 திகதி: 2012-01-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2079/2012: Grama Niladari - Vacancies -Divisional Secretariat Division, Akurana

2079/ ’11

 

கௌரவ அப்துல் ஹலிம்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் (95%) தமிழ் மொழி பேசுபவர்கள் என்பதையும்;

(ii) எனினும் இப்பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய கிராம உத்தியோகத்தர்கள் 6 பேர் மாத்திரமே என்பதையும்;

(iii) தற்போது மேற்படி பிரிவில் 05 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) புதிதாக கிராம உத்தியோகத்தர் நியமனம் வழங்கும் போது தமிழ் மொழியில் கடமையாற்றக் கூடிய உத்தியோகத்தர்களை அக்குரணை பிரதேச செயலகப் பிரிவுக்கு ஆட்சேர்ப்பதற்கும், ஏற்புடைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு இணைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-01-20

கேட்டவர்

கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks