01

E   |   සි   |  

 திகதி: 2012-01-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2077/2012: Drinking Water Project - Akurana

2077/ ’11

கெளரவ அப்துல் ஹலீம்,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      1980 ஆம் ஆண்டில் பின்லாந்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டத்தின் மூலமாக கண்டி மாவட்டத்தின் அக்குரணை     பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைத்துள்ளதென்பதையும்;

(ii) எனினும், அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அலவத்துகொட பிரதேசத்திற்கு மாத்திரம் இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு குடிநீர் வழங்கப்படுகின்றதென்பதையும்;

(iii) மேலும் இப்பிரிவில் உள்ள அலவத்துகொட நகரம் உள்ளிட்ட கெந்தகொல்ல, பலகடுவ, சயிஸ்டன் பிரதேசம், நாகஹபிட்டிய, வெந்தேசி வத்த, ஹிபிட்டிய, தெல்கஸ்கொட, அரம்பேபொல மற்றும் மாவத்துபொல ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளார்கள் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) மகாவலி நீரைக்கொண்டு தற்போது அன்றாடம் 24 மணித்தியாலங்களும் அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்களுக்கு நீர் வழங்கல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதால் இதே வசதியை மேற்படி பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-01-19

கேட்டவர்

கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல், வடிகாலமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks