01

E   |   සි   |  

 திகதி: 2023-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0004/2023: Effect of decision to store paddy at Mattala International Airport

4/2023

கௌரவ சமிந்த விஜேசிறி,— துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஒரு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்படும் போது கருத்திற்கொள்ளப்படும் காரணிகள் யாவையென்பதையும்;

(ii) கடந்த "நல்லாட்சி அரசாங்கம்" ஆட்சியிலிருந்தபோது மத்தள சர்வதேச விமான நிலையம் நெல் களஞ்சியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை அறிவாரா என்பதையும்;

(iii) மேற்படி நெல் களஞ்சியப்படுத்துவதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு காரணமாகவிருந்த அரசியல்வாதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iv) அத் தீர்மானத்தின் விளைவாக மேற்படி விமான நிலையத்தின் வளாகத்திற்கும் அவ் விமான நிலையத்தின் நற்பெயருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதென்பதை அறிவாரா என்பதையும்;

(v) ஆமெனில், அது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-07

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks