பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
520/2020
கௌரவ சாணக்கியா ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புன்னைக்குடா, கோட்டைக்கல்லாறு ஆகிய பிரதேசங்களுக்கு முகத்துவார வாயில்களை (Bay Mouth Gates) நிர்மாணித்து படகுகளை நிறுத்தி வைப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக பல உள்ளூர் கடற்றொழிலாளர்கள் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதை அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், அப்பிரதேசங்களில் முகத்துவார வாயில்களை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-20
கேட்டவர்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
அமைச்சு
கடற்றொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) ஆம்.
(ஆ) மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைக்கல்லாறுப் பிரதேசத்தில் முகத்துவார வாயிலில் சேற்று மண் தேங்கியிருக்கின்றமை காரணமாக அது நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது. இத்தகைய சேற்று மண்ணை அகற்றி, இந்த முகத்துவார வாயிலைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாதிருப்பதற்கும் நிலைபேறான திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு ஆகிய பிரதேசங்களுக்கிடையிலும் கோட்டைக்கல்லாறு, ஒண்டச்சிமடம் ஆகிய பிரதேசங்களுக்கிடையிலும் இவற்றுக்கெனக் கதவுகள் அமைப்பது தொடர்பில் முறையான சாத்தியப்பாட்டு ஆய்வுகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேற்படி ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றதும், ஏனைய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
தற்போது இந்தப் பிரதேசத்தைச் சோ்ந்த வெளியிணைப்பு இயந்திரத்துடன் கூடிய சுமார் 78 மீன்பிடிப் படகுகளும் சுமார் 70 இயந்திரமற்ற மீன்பிடிப் படகுகளும் கரையோரங்களிலிருந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மேற்படி படகுகளையும் சோ்த்து மேலும் பல படகுகளை நிறுத்தி வைப்பதற்கு வசதியாக மேற்படி பிரதேசத்தில் படகுத்துறையினைப் போதிய வசதிகளுடன் நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புன்னைக்குடாப் பிரதேசத்தை அண்டி முகத்துவார வாயிலொன்றை அமைப்பதற்கு அதனுடன் தொடர்பு கொள்கின்ற வகையில் களப்புப் பகுதி இன்மை காரணமாக, புன்னைக்குடாப் ரதேசத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள களுவன்கேணிப் பிரதேசத்தில் கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இறங்குதுறையொன்றினை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இங்கு ஏற்கனவே அமையப்பெற்றுள்ள, தற்போது செயற்படாதிருக்கும் ஐஸ் தொழிற்சாலை மற்றும் எண்ணெய் நிரப்பும் நிலையம் என்பவற்றைச் சீரமைத்து மீள இயக்குவதற்கும், இத்துறையினைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பாதைகளும் புனரமைக்கப்பட்டு, இப்பகுதியில் அமைந்துள்ள அகழியும் ஆழமாக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு, படகுகளைத் தரித்து வைப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தற்போதைய நிலையில் களுவன்கேணி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெளியிணைப்பு இயந்திரத்துடன் கூடிய சுமார் 190 மீன்பிடிப் படகுகளும் சுமார் 210 இயந்திரமற்ற மீன்பிடிப் படகுகளும் கரையோரங்களிலிருந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
(இ) ஏற்புடையதன்று.
பதில் தேதி
2020-12-09
பதில் அளித்தார்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks