01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1135/2019: Decline of roof tile industry due multinational companies

1135/ '19

கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) நேரடியாக அல்லது மறைமுகமாக இலட்சக் கணக்கான மக்களது ஜீவனோபாய மார்க்கமாக, அதேவேளை 100% உள்நாட்டுக் கைத்தொழில் துறையாக விளங்குகின்ற கூரை ஓட்டுக் கைத்தொழில்துறையை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி கைத்தொழில் துறையானது பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளமையை அவர் அறிவாரா என்பதையும்;

(iii) மேற்படி கைத்தொழில் துறையின் வீழ்ச்சியுடன் உள்நாட்டுக் கைத்தொழில் துறையைச் சார்ந்த களிமண் கூரை ஓடுகளின் உற்பத்தியாளர்களும் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் எதிர்நோக்க நேரிடுகின்ற தலைவிதி யாதென்பதையும்;

(iv) அஸ்பஸ்டோஸ் கூரைத்தகடு உற்பத்தியில் ஈடுபடும் பல்தேசிய கம்பனிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு அரச நிறுவனங்களுக்கென அஸ்பஸ்டோஸ் கூரைத் தகடுகள் கொள்வனவு செய்யப்படுவதனை அவர் அறிவாரா என்பதையும்;

(v) உள்நாட்டுக் களிமண் கூரை ஓடுகள் உற்பத்தியாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள அரச அனுசரணைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-10-23

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks