2014 டிசம்பர் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2014-12-12 |
கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் கேட்டு விலகியுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ அமீர் அலி சிஹாப்தீன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செத்தெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
(ii) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கைச் சுங்கம்
(iii) 2013 ஆம் ஆண்டிற்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
(iv) 2013 ஆம் ஆண்டிற்கான கமநல அபிவிருத்தித் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(v) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை போக்குவரத்து சபை
(vi) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை அரசாங்க பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம்
(vii) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை
(viii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை முதலீட்டுச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(ix) 2011 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் நிர்வாக அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துக்ககளைப் பற்றி ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் இடைக்கால அறிக்கை
(ii) கைத்தொழில், வாணிப அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழுவின் அறிக்கை
ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 161 முதல் 163 வரையான விடயங்களாகக் காணப்படும்) சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வருடாந்த இடமாற்ற சபையில் தொழிற்சங்க பிரதிநிதித்துவம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1733 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜனவரி 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






