2014 நவம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2014-11-19 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் அமைச்சரால் உற்பத்தி வரி தொடர்பில் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 1885/42 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(ii) 2011 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் இறுதியாக திருத்தப்பட்ட, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 இ ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் அமைச்சரால் உற்பத்தி வரி தொடர்பில் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 1885/43 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iii) அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் பந்தி (2) இன் உடனும் 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும், 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 20 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியால் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 1885/50 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
அரசியலமைப்பின் 44 (2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ், சனாதிபதியால் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பாக ஆக்கப்பட்ட கட்டளைகள்;
(iv) 2014 ஓகத்து 11 ஆம் திகதிய 1875/17 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(v) 2014 ஓகத்து 14 ஆம் திகதிய 1875/30 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(vi) 2014 ஓகத்து 22 ஆம் திகதிய 1876/42 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(vii) 2014 செத்தெம்பர் 04 ஆந் திகதிய 1878/42 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(viii) 2014 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 1885/47 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(ix) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான தீர்மானம்.
(2014 ஒற்றோபர் 24 ஆந் திகதிய 1885/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(x) காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 1885/44 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(மதுவரி அறிவித்தல் இலக்கங்கள் 968, 969, 970, 971 மற்றும் 972 )
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழான செஸ் வரி தொடர்பில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் ஆக்கப்பட்ட கட்டளைகள்;
(xi) 2014 ஒற்றோபர் மாதம் 24 ஆம் திகதிய1885/45 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(xii) 2014 ஒற்றோபர் மாதம் 24 ஆம் திகதிய 1885/46 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(xiii) 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான தொல்லியல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரச வளங்கள் தொழில்முயற்சி அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட இருபத்தோராம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 13 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) அஞ்சல் அலுவலக கட்டளைச்சட்டத்தின் கீழ் விதிகள்
(ii) இலங்கை தேசிய எந்திரவியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை 2011
(iii) தேசிய விஞ்ஞான மன்றத்தின் வருடாந்த அறிக்கை-2011
(iv) தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை-2011
(v) இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை-2011
(vi) தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை 2011
(vii) அடிப்படைக் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை-2011
(viii) ஒத்திசைவு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை-2011
(ix) அணுசக்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை-2011
(x) கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை-2011
(xi) இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை-2011
(xii) நவீன தொழில்நுட்பவியல்களுக்கான ஆர்தர் சீ. கிளார்க் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை-2011
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அறிவக மையங்களில் தேசிய தொழில் தகைமை மற்றும் பட்டப்படிப்பு கணனிக் கல்வி” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 20ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2015]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






