இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2014 நவம்பர் 15ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2014-11-15

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் காணிகள் சீராக்கல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) உயர் கல்வி
(ii) நிதி, திட்டமிடல்
(iii) நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள்

பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2015) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) விஜயகுமாரதுங்க ஞாபகர்த்த வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் 2011
(ii) ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் 2011
(iii) அரச மருந்தகக் கூட்டுத்தாபன வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்-2011


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“உள்ளூராட்சி தேர்தலில் வட்டார முறைமை” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 17ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2015]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom