இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2014 நவம்பர் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2014-11-13

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்டச் செயலகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான சுதேச வைத்திய அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபை
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியம்
(v) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) கைத்தொழில், வாணிப அலுவல்கள்
(ii) கலாச்சார, கலை  அலுவல்கள்

பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.

(iii) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் “ஏ” நிலையியற் குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்றத் தெரிகுழு

இலங்கை மக்களுக்கு ஒரே தேச மக்களாக வாழ்வதற்கு தத்துவமளிப்பதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகளை பற்றி விதந்துரைத்து அறிக்கை செய்வதற்காக 2015 மே மாதம் 12ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்களின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2015) – குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மொழிபெயர்ப்பாளர் சேவையிலுள்ளோரது ஊதியம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ துனேஷ் கங்கந்த அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 14ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2015]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom