2014 நவம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2014-11-05 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தி மற்றும் 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டத்தினாலும், 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவுடனும் அந்தச் சட்டத்தின் 6 ஆம் பிரிவுடனும் 14 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், சனாதிபதியினால் ஆக்கப்பட்டு 2014 செத்தெம்பர் 30 ஆம் திகதிய 1882/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.
அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தி மற்றும் 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டத்தினாலும், 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவுடனும் 14 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், சனாதிபதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்;
(ii) 2014 ஒற்றோபர் 02 ஆம் திகதிய 1882/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iii) 2014 ஒற்றோபர் 10 ஆம் திகதிய 1883/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் 27(1) ஆம் உட்பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது பேராதனைப் பல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 20 ஆம் திகதிய 1885/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் 27(1) ஆம் உட்பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது கொழும்பு பல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 01 ஆம் திகதிய 1882/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வாக்குரிமை முதலியன” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 07ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2015]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






