2014 நவம்பர் 01 ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2014-11-01 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2013 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி
(ii) நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை
பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சில்வேஸ்திரி அலன்ரின் அவர்களுக்கு “சந்திரகுமார் சமூகமேம்பாட்டு மன்ற
(கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூல (2015) இரண்டாம் மதிப்பீடு இன்று சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களை அழைப்பதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 157 பேரும் எதிராக 57 பேரும் வாக்களித்தனர்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 03ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2015]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






