இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2014 ஒக்டோபர் 30 ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2014-10-30

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) (190 ஆம் அத்தியாயமான) அஞ்சல் அலுவலக சட்டத்தின் 6, 10, 12, 19, 21, 25, 27, 43, 44, 59 மற்றும் 68 ஆம் பிரிவுகளின் கீழ் அஞ்சல் சேவைகள் அமைச்சரால் நிதி, திட்டமிடல் அமைச்சரின் இணக்கத்துடன் தயாரிக்கப்பட்டு, 2014 யூலை 25 ஆம் திகதிய 1872/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்

(ii) 2013 ஆம் ஆண்டிற்கான மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2015) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2015) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியிலுள்ள தற்போதைய பிரச்சினைகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2014 ஒக்டோபர் 31ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2015]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom