இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2014 ஒக்டோபர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2014-10-23

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) சுகாதார அலுவல்கள்
(ii) சுதேச மருத்துவத்துறை

பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க அவர்களுக்கு “அருந்திக பர்னாந்து நிவாரண சேவைகள் மற்றும் கொட்பிறி பர்னாந்து ஞாபகார்த்த மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) இலங்கை அணுசக்தி சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள்


ஒத்திவைப்புப் பிரேரணை

“2014.10.09ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற் கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இரான் விக்கிரமரத்ன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1945 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஒக்டோபர் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom