இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2014 ஒக்டோபர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2014-10-10

பத்திரங்கள் சமர்ப்பித்தல்


(i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ், கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மேல் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஓகத்து 19 ஆம் திகதிய 1876/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை

(ii) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம்
(iii) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிலையம்
(iv) 2011 மார்ச் 31 ஆம் வருட முடிவுக்கான லங்காலேலன்ட் லிமிடட்
(v) 2012 மார்ச் 31 ஆம் வருட முடிவுக்கான லங்காலேலன்ட் லிமிடட்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

“மெடிசினா ஓல்டனேடிவா நிறுவனம் (கூட்டிணைத்தல்)”

சட்டமூலம் பற்றிய “ஏ” நிலையியற் குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

டிஎவ்சீசீ வங்கி (நீக்கல் மற்றும் விளைவாந்தன்மையினவான ஏற்பாடுகள்)

இ.அ.நி.கூ. வங்கியை “டிஎவ்சீசீ வங்கி பீஎல்சீ” என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பகிரங்க கம்பெனியொன்றாக பதிவு செய்வதற்கும்; அத்தகைய பதிவு செய்கின்றமையின் விளைவாந்தன்மையினவான ஏற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்வதற்கும்; (165 ஆம் அத்தியாயமான) இ.அ.நி.கூ. வங்கிச் சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு  சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.

இலங்கை அணுசக்தி

இலங்கை அணுசக்தி சபையைத் தாபிப்பதற்கும்; தேசிய அபிவிருத்தி நோக்கங்களுக்காக அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலைப் பயன்படுத்துவதனை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும்; இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தும் பேரவையைத் தாபிப்பதற்கும்; அயனாக்கற் கதிர்வீச்சையும் மூலங்களின் காப்பையும் பாதுகாப்பையும் உட்படுத்துகின்ற செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும்; அணுவாயுதங்களைத் தடைசெய்வதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும்; 1969 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, அணுசக்தி அதிகாரசபைச் சட்டத்தை நீக்குவதற்கும், இவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அதன் இடை நேர்விளைவான விடயங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு  சட்டமூலத்தினை கெளரவ தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 13; எதிராக 27) கெளரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களுக்கு மேற்சொன்ன சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 168, 170 மற்றும் 174 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) ஸ்ரீ லங்கா கமநல நிறுவனம் (கூட்டிணைத்தல்)
(ii) ஜம்மிய்யத்துல் ஸஹ்வா அல் - கைரிய்யா (ஜஸ்கா) (கூட்டிணைத்தல்)
(iii) அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் நிதியம் (கூட்டிணைத்தல்)

பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 166, 167, 169, 171, 172 மற்றும் 173 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “பி” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) ஜயந்திபுர நலன்புரிச் சங்கம் (கூட்டிணைத்தல்)
(ii) மெத் சேவா மன்றம் (கூட்டிணைத்தல்)
(iii) ஜயரத்ன மன்றம் (கூட்டிணைத்தல்)
(iv) எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன மன்றம் (கூட்டிணைத்தல்)
(v) அனுர விதானகமகே பிரஜா சங்வர்தன மன்றம் (கூட்டிணைத்தல்)
(vi) அல்ஹசன் மன்றம் (கூட்டிணைத்தல்)


ஒத்திவைப்புப் பிரேரணை

“திவிநெகும” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அனுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஒக்டோபர் 20ஆந் திகதி திங்கட்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom