இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு - 2024.08.06

திகதி : 2024-08-06

சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 யூலை 26 ஆம் திகதி “சமாதி தியானம் மற்றும் யோகா நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்திலும் 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி “குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” மற்றும் “மாத்தறை பருவகால ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலங்களிலும் தன்னால் சான்றுரை எழுதப்பட்டதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஆக. 06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்

சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் 2024 யூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ ஏ.எச்.எம். பௌஸி, கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, கௌரவ வடிவேல் சுரேஷ், கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ மற்றும் கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக ஆகிய உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், 2024 யூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண, கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு, கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி, கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, கௌரவ குலசிங்கம் திலீபன், கௌரவ சுதத் மஞ்சுல, கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ, கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான, கௌரவ மர்ஜான் பளீல், கௌரவ ஜகத் சமரவிக்ரம மற்றும் கௌரவ வீரசேன கமகே ஆகிய உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட குழுவின் வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அவர்கள் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom