இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தின் கனிஷ்ட பணியாளர் மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அவர்களின் அறிக்கை

திகதி : 2024-01-31

பாராளுமன்றத்தின் வீட்டுப் பராமரிப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த பெண் பணியாளர்கள் சிலர்  2022ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பின்னர் என்னிடம் முறையிடப்பட்டதுடன், இதற்கு அமைய கௌரவ சபாநாயகரின் ஆலோசனையின் கீழ் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக உள்ளக விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை அண்மையில் எனக்கு கையளிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் மேலதிக ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக இது சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையை ஆராய்ந்த சட்டமா அதிபர், இந்தச் சம்பவம் குறித்து முதற்கட்ட முறைப்பாடு அவசியம் என ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கு அமைய குறித்த அறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட பின்னர், பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமையவே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, என்னால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு அதற்கு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு அந்த அறிக்கை வழங்கப்பட்டு, பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர்கள் பிரிவினால் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் எந்தவொரு தரத்தில் இருப்பவர்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது எனது சேவைக் காலத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்கின்ற எந்தவொரு சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கை தொடர்பில் நாட்டின் சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்க நான் உள்ளிட்ட உயர் நிர்வாகம் எந்தவொரு தயக்கமும் காட்டாது என்பதையும், இது தொடர்பில் கௌரவ சபாநாயகரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை தொடர்ச்சியாக எமக்குக் கிடைத்து வருவதாகவும் மேலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

sgp

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom