இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் வாள் கையளிக்கப்பட்டது

திகதி : 2024-01-30

ஓய்வுபெறும் பாராளுமன்றப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு இன்று (ஜன. 30) முற்பகல் பாராளுமன்ற சபை மண்டபத்தின் வெள்ளிக் கதவுக்கு அருகில் இடம்பெற்றது.  

பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் 42 வருடங்கள் பாராளுமன்றத்தில் சேவையாற்றி இன்று (30) ஓய்வுபெறவுள்ளதால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் இவ்வாறு சம்பிரதாயபூர்வமாக வழக்கிவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் 6 வது படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் 2018 முதல் படைக்கலச் சேவிதராக சேவையாற்றினார். அதற்கமைய பாராளுமன்றத்தின் 7 வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன நாளை (31) பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகியோரும் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்களும், பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

3 6

1 7

15 12

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom