மாத்தறை புனித சர்வேஷஸ் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் ஜனாதிபதி செயலகத்தில் |
திகதி : | 2024-01-24 |
மாத்தறை புனித சர்வேஷஸ் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் 2024.01.23 ஆம் திகதி ஜனாதிபதி செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகப் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்கவும் கலந்துகொண்டார்.
இங்கு பிரதான உரையாற்றிய பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், ஜனநாயகத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு எதிர்கால சந்ததியினர் உறுதிபூண வேண்டும் எனத் தெரிவித்தார். எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கு மாணவர் பாராளுமன்றம் உள்ளிட்ட இவ்வாறான வேலைத்திட்டங்கள் மாணவர்களுக்கான சிறந்த சந்தர்ப்பமாகும் எனவும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
புனித சர்வேஷஸ் கல்லூரியின் அதிபர் எல்.பி. விராஜித் இங்கு உரையாற்றும் போது, இலங்கை வரலாற்றில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட சட்டவாக்க கட்டடமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்த விவாதம் இடம்பெறுகின்றமை மாணவர்களுக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பமாகும் எனத் தெரிவித்தார். அதற்கமைய, தலைமைத்துவப் பண்புகளை விருத்தி செய்துகொண்டு பாடசாலையையும் உயர்த்தி வைக்கவேண்டும் என மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக அதிபர் தெரிவித்தார்.
மாத்தறை புனித சர்வேஷஸ் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும், இதன்போது கலந்துகொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.
நிகழ்வை அடுத்து, ஜனாதிபதி செயலகப் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்க மாணவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, இலங்கை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் சேவை அதிகாரி துமிந்த விக்ரமசிங்க மற்றும் பொதுமக்கள் சேவை ஒருங்கிணைப்பாளர் ஜய பிரகாஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்













