இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபாநாயகரின் அறிவித்தல்கள் - 2024.01.24

திகதி : 2024-01-24

“பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பில் மேலும் 18 மனுக்கள்

2024 சனவரி மாதம் 23 ஆம் திகதிய தனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் பதினெட்டு மனுக்களின் பிரதிகள் தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சபாநாயளர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஜன. 24) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” எனும் சட்டமூலம் தொடர்பில் மேலும் 05 மனுக்கள்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் ஐந்து  மனுக்களின் பிரதிகள்  தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom