இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபாநாயகரின் அறிவித்தல்கள் - 2024.01.23

திகதி : 2024-01-23

“பயங்கரவாத  எதிர்ப்பு” சட்டமூலம் தொடர்பான மனுக்கள்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாத  எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மனுக்களின் பிரதிகள் தனக்குக்  கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஜன. 23) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

“நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” சட்டமூலம் தொடர்பான மனுக்கள்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகளும் தனக்குக்  கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இலங்கையின் மலையக தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான  பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்துக்கு அனுமதி

கௌரவ வேலுகுமார் மற்றும் 21 உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள எழுத்துமூலமான கோரிக்கையின் பேரில் “இலங்கையின் மலையக தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான  பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தை” (Caucus for the Evolution of Malaiyaga Plantation Community in Sri Lanka) தாபிப்பதற்காக 2024 ஜனவரி 12 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom