இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற முறைமை தொடர்பில் பேருவளை நளீமியா கலாபீட மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

திகதி : 2024-01-12

பேருவளை நளீமியா கலாபீடத்தில் கல்விபயிலும் மாணவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில் (ஜன. 10) கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நளீமியா கலாபீடத்தின் அடிப்படைக் கற்கைகள் மத்திய நிலையம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் கல்விகற்கும் மாணவர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டதுடன், இதன் மூலம் பாராளுமன்ற முறைமை, சட்டவாக்க முறைமை மற்றும் பாராளுமன்றக் குழுக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு  தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொது வெளிக்கள சேவைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில், உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.யு.எம். வாசிக், பொது வெளிக்கள சேவை அதிகாரி யஸ்ரி மொஹமட் மற்றும் ஊடக அதிகாரி நுஸ்கி முக்தார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை பாராளுமன்றத்தினால் நளீமியா கலாபீட நூலகத்துக்கு புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom