இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

திகதி : 2024-01-09

இன்று (ஜன. 09) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இடம்பெற்றதுடன், விவாதத்தை அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  ஜீ.ஜீ. பொன்னம்பலம் சட்டமூலத்துக்கு வாக்கெடுப்புக் கோரினார். அதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் வழங்கப்பட்டன. இதன்படி, சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் குழுநிலையின் போது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதற்கமைய, சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேசிய நீரளவை சட்டமூலமும் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom