இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

திகதி : 2023-12-13

  • சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பனவும் சான்றுரைப்படுத்தப்பட்டன

 

பாராளுமன்றத்தில் இன்றையதினம் (டிச. 13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் இன்று சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும் 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.

spkr-bills-endorse-dec-13

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom