இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவு

திகதி : 2023-12-12

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் அண்மையில் (டிச. 07) தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமா ஜீனா இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.   

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பைஸல் காஸிம், கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மேஜர் சுதர்ஷன தெனிபிடிய செயலாளராகவும், கௌரவ செல்வம் அடைக்கலநாதன் உதவிச் செயலாளராகவும், கௌரவ இஷாக் ரஹுமான் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபித்தல் இந்நாட்டின் நெருங்கிய நட்பு நாடான  மாலைதீவுடன் காணப்படும் நட்புறவை விருத்தி செய்வதற்கு  உதவும் என இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் பாராளுமன்ற எஸ்.எம்.எம். முஷாரப் குறிப்பிடுகையில், நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கை - மாலைதீவு தொடர்புகளை விருத்தி செய்வதற்கு எதிர்காலத்தில் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom