இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நாளை (டிச. 10)

திகதி : 2023-12-09

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்தும் நோக்கில் நாளையதினம் (10) பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதற்கமைய நாளை மு.ப 9.30 மணிமுதல் பி.ப 4.30 மணிவரை இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இந்த விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

அதேநேரம், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இறுதி மூன்று நாள் விவாதம் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 13ஆம் திகதி புதன்கிழமை வரை இடம்பெறவிருப்பதுடன், 13ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடைபெறும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom