இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எகிப்து தூதுவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

திகதி : 2023-12-05

இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே (Maged Mosleh) அண்மையில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

எகிப்து மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் 66 வருட இரு தரப்பு உறவுகள் தொடர்பில் சபாநாயகர் மற்றும் தூதுவருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடுதல் மற்றும் இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குப் பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது மேலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இதன்போது கலந்துகொண்டார்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom