சபாநாயகரின் அறிவித்தல்கள் - 2023.12.05 |
திகதி : | 2023-12-05 |
தனியார் உறுப்பினர் சட்டமூலங்களைப் பரிசீலனை செய்வதற்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்
“சஹன சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சாபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (டிச. 05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ ரோஹண பண்டார, கௌரவ நிபுண ரணவக, கௌரவ ஜகத் சமரவிக்ரம ஆகியோர் மேலதிக உறுப்பினர்களான நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கிழக்கு மீளெழுச்சி அமைப்பு (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு, கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்ஸாரப், கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ ரோஹண பண்டார, கௌரவ நிபுண ரணவக, கௌரவ டீ. வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






