இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மக்களிடமிருந்து தூரமாகியிருந்த பாராளுமன்றம் தற்பொழுது மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக மாறிவருகின்றது - பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, கொலன்னாவ பெண்களை பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தின் கன்னியமர்வில் தெரிவிப்பு

திகதி : 2023-12-04

கொலன்னாவ பெண்கள் பாடசாலையின் மாணவர் பாராளுமன்றத்தின் கண்ணியமர்வு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் 2023.11.30 ஆம் திகதி வெகு விமர்சையாக பாடசாலையில் இடம்பெற்றது.  

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிடுகையில், மக்களிடமிருந்து தூரமாகியிருந்த பாராளுமன்றம் மீண்டும் மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக மாறிவருவதாகத் தெரிவித்தார். நாடுபூராகவும் மாணவர் பாராளுமன்றங்களை ஆரம்பிப்பது அதற்குப் பிரதான காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அதன் பிரயோகரீதியான செயற்பாடுகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் பெறுமதி தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் நினைவு படுத்தினார்.

இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டன. மாணவர் பாராளுமன்றத்தை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தேர்ந்துடுக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் செய்துகொண்டனர்.

இதன்போது கொலன்னாவ பெண்கள் பாடசாலைக்கு பாராளுமன்றத்தினால் புத்தகத் தொகுதியொன்றும் கையளிக்கப்பட்டதுடன், அப்பாடசாலையில் மாணவர் பாராளுமன்றத்தை அமைப்பதற்கு வழங்கிய பங்களிப்புக்காக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்திற்கு பாடசாலையினால் பரிசு வழங்கிவைக்கப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் ஜயன்தா பலகல்ல, சமூக விஞ்ஞான கல்விப் பணிப்பாளர் வாசனா ஹெட்டியாரச்சி, பிரதி அதிபர்கள், கொலன்னாவ பெண்கள் பாடசாலையின் மாணவர் பாராளுமன்றப் பொறுப்பாசிரியை நிசன்சலா கல்மன்கொட உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

5 6

7 8

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom