ஆசிய பசிபிக் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட சர்வதேச மாநாடு டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் |
திகதி : | 2023-12-04 |
பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் 'வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை ஊக்குவித்தல்' எனும் தொனிப்பொருளின் கீழ் உலக அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட சர்வதேச மாநாடு 2023 டிசம்பர் 06 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவையின் (ISCP) தலைவர், இலங்கையில் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த மாநாட்டிற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமை தாங்கவுள்ளார்.
இந்த மாநாட்டை உலகளாவிய அமைதி ஒன்றியம் (UPF) மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்களான அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவை (ISCP) மற்றும் அமைதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் (IAPP) ஆகியன இலங்கை பாராளுமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
உலகளாவிய அமைதி ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சார்ள்ஸ் யாங், சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைதி அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத் தலைவர் கௌரவ ஏக் நாத் தகால் மற்றும் உலகளாவிய அமைதி ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத் தலைவர் கௌரவ மஸாய்சி ஹொரி மற்றும் மலேசியா, நேபால், இந்திய மற்றும் பங்களாதேஷ் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் சர்வதேசப் பிரதிநிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






