2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் விதந்துரைப்புக்களை செயற்படுத்துவது பற்றிய பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் |
திகதி : | 2023-12-02 |
2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா மற்றும் கௌரவ ரோஹண பண்டார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் விதந்துரைப்புக்களை செயற்படுத்தல் பற்றிய பிரேரணை மேலதிக வாக்குகளால் இன்று (டிச. 02) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. அத்துடன் மூன்று உறுப்பினர்கள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர்.
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விதந்துரைப்புக்களுக்கு அமைய இந்த உறுப்பினர்களின் பாராளுமன்றச் சேவை 2023 டிசம்பர் 02 ஆம் திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்படும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






