இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“தென்னிலங்கை மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தைப் பரிசீலிப்பதற்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்

திகதி : 2023-12-02

“தென்னிலங்கை மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113(2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்களை நியமித்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (டிச. 02) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, கௌரவ றோஹண திஸாநாயக்க, கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு, கௌரவ  இசுரு தொடன்கொட, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ ரோஹண பண்டார மற்றும் கௌரவ நிபுண ரணவக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom