இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபாநாயகரின் அறிவித்தல்கள் - 2023.11.28

திகதி : 2023-11-28

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112(1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றுக்கு அமைவாக, கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற  உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து   நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (நவ. 28) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ பழனி திகாம்பரம், கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ வருண லியனகே, கௌரவ சம்பத் அதுகோரல, கௌரவ திஸகுட்டி ஆரச்சி, கௌரவ உதயகாந்த குணதிலக்க, கௌரவ குலசிங்கம் திலீபன், கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ எம். ராமேஷ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom