சுகாதார அமைச்சருக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை பிரேரணை மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

திகதி : 2023-09-08

Print

சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் இன்று (செப். 08) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆதரவாக 73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் கடந்த 06, 07, 08 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது.