கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார் |
திகதி : | 2023-08-07 |
கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மியோன் லீ (Miyon LEE) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் (ஆக. 03) சந்தித்தார்.
பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இலங்கையின் விவசாயத்துறையுடன் தொடர்புபட்ட ஆய்வு மற்றும் அபிவிருத்திகளுக்கு ஆதரவளிப்பது பற்றிய தூதுவர் வலியுறுத்தினார்.
அத்துடன், KOICA மூலம் வழங்கப்படும் ஆதரவுகள், கல்விக்கான ஆதரவுகள், போக்குவரத்து, நீர் முகாமைத்துவம் மற்றும் சுகாதாரம் போன்று கிராமப்புற அபிவிருத்தி என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் இதன்போது கலந்துகொண்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








