அரச சேவை கெரம் சுற்றுப்போட்டியில் பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக் கழகம் A மற்றும் C பிரிவுகளில் சம்பியன் |
திகதி : | 2023-07-11 |
2023 அரச சேவை கெரம் சுற்றுப்போட்டியில் A மற்றும் C பிரிவுகளில் சம்பியன் கிண்ணத்தைப் பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக் கழகம் அண்மையில் வெற்றிகொண்டது.
A பிரிவின் இறுதிப்போட்டியில் கொழுப்பு பல்கலைக்கழ அணியையும், C பிரிவின் இறுதிப்போட்டியில் மொறட்டுவை பல்கலைக்கழக அணியையும் தோற்கடித்து பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக் கழகத்தினால் கிண்ணம் வெற்றிகொள்ளப்பட்டது.
இதில், பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி A பிரிவின் போட்டியில் சுஜீவ லசந்த (தலைவர்), ரசிக ராஜபக்ஷ, கயான் பெரேரா, பிரியந்த தர்மசேன மற்றும் சஞ்சய பர்னாந்து மற்றும் C பிரிவின் போட்டியில் தரிந்து பெரேரா (தலைவர்), பவந்த ஷாமிக, பிரதீப் புஷ்பகுமார, ஆர்.எம். ரத்நாயக்க மற்றும் சதுக்ஷ மதுசங்க ஆகியோர் பங்குபற்றினர்.
சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்ட பாராளுமன்றப் பணியாளர்களின் விளையாட்டுக் கழகத்துக்குப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பணியாளர்களால் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










