கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு |
திகதி : | 2023-07-07 |
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “ஆயுள்வேதம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவின் பிரதி தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஜூலை 07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து கௌரவ துஷார இந்துனில் அமரசேன அவர்கள் இராஜினாமா செய்தமையின் காரணமாக அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ ஜயந்த சமரவீர அவர்கள் பாராளுமன்ற 106 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






