அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட குழு நியமனம் |
திகதி : | 2023-07-06 |
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஜூலை 06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ டி.வீ. சானக, கௌரவ விஜித ஹேரத், கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ ஹர்ஷண ராஜகருணா, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட, கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






