இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ருமேனிய இராஜாங்க செயலாளர் சபாநாயகரைச் சந்தித்தார்

திகதி : 2023-06-27

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ருமேனியாவின் இராஜாங்க செயலாளரும் வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சருமான ட்ரேயன் ஹிரிஸ்டியா (Traian Hristea) தலைமையிலான தூதுக்குழு, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நேற்று (ஜூன் 26) பாராளுமன்றத்தில் சந்தித்தது.

இந்தத் தூதுக்குழுவில் ருமேனிய வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் டயானா டேஸ், வெளிவிவகார அமைச்சின் கவுன்சிலர் போக்டன் அல்டியா மற்றும் இலங்கைக்கான ருமேனியத் தூதுவர் கலாநிதி விக்டர் சியுஜ்டியா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ருமேனியாவில் இலங்கை தூதரகத்தை அமைக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இராஜாங்கச் செயலாளர் ட்ரேயன் ஹிரிஸ்டியா இதன்போது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையில் உறுதியான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த இது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார். அத்துடன் தொழில், கல்வி, வர்த்தகம், முதலீடு, சைபர் பாதுகாப்பு, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும்  இடையிலான ஒத்துழைப்புக்கு இது வழியமைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கையர்களுக்கு ருமேனியாவில் வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமைக்கு நன்றிகளைத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள், இலங்கை - ருமேனியா பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனூடாக எதிர்காலத்தில் உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ருமேனியப் பாராளுமன்ற சபாநாயகரின் தலைமையிலான தூதுக்குழுவொன்றை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.

அதற்கு மேலதிகமாக, இராஜதந்திர தொடர்புகள், பல்கலைக்கழகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் வேலைவாய்ப்புக்காக செல்வோரின் விசா நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் போன்ற விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில், இலங்கை - ருமேனியா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் மற்றும் கௌரவ அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ மதுர விதானகே, கௌரவ வேலு குமார், கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom