வெகு விமர்சையாக இடம்பெற்ற இரத்தினபுரி இயேசு பாலகர் கன்னியர் மடம் தேசிய பாடசாலை மாணவர் பாராளுமன்றம் |
திகதி : | 2023-06-26 |
பாடசாலை மாணவ, மாணவியருக்கு ஜனநாயகம், பொறுப்புணர்வு மற்றும் பொறுப்புக்கூறல், வாக்களிப்பின் முக்கியத்துவம் என்பன தொடர்பில் நடைமுறை ரீதியான அறிவைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொது வெளிக்கள சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அண்மையில் இரத்தினபுரி இயேசு பாலகர் கன்னியர் மடம் தேசிய பாடசாலைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில், பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய அங்குரார்ப்பணக் கூட்டத்தில் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார். அதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறைகள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்து பாராளுமன்ற விவாதமொன்றும் இடம்பெற்றது.
அத்துடன், இந்நிகழ்வில் பாராளுமன்றமும் அதன் சட்டவாக்க செயன்முறைகள் தொடர்பில், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச். ஈ. ஜனகாந்த சில்வா விசேட உரையாற்றியதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் பாராளுமன்ற நிர்வாகத் திணைக்களத்தின் பணிப்பளார் ஜீ. தட்சனாராணி விரிவாக விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில், இரத்தினபுரி கல்வி வலயத்தின் 6 பாடசாலைகளின் மாணவர் பிரதிநிதிகள், விடயங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டதுடன், அந்தப் பாடசாலை நூலகங்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான தகவல்கள் அடங்கிய நூல்களும் கையளிக்கப்பட்டன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















