வரவிருக்கும் சவாலான காலங்களை வெற்றிகொள்ள பாராளுமன்றத்தின் அனைத்துப் பணியாளர்களினதும் ஆதரவை எதிர்பார்க்கின்றேன் – பணியாட் தொகுதியினர் மத்தியில் உரையாற்றிய புதிய செயலாளர் நாயகம் தெரிவிப்பு |
திகதி : | 2023-06-19 |
ஏற்படக்கூடிய பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்த நாட்டின் உயரிய நிறுவனமான பாராளுமன்றத்தின் பணிகளை அதிக வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு அனைத்துப் பணியாளர்களின் அதிபசட்ச ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அண்மையில் தெரிவித்தார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகமாகப் பதவியேற்ற பின்னர் அண்மையில் (ஜூன் 13) முதன்முறையாகப் பாராளுமன்ற பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் சில வருடங்களில் அதிகளவான அனுபவமிக்க பாராளுமன்ற பணியாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஏற்படும் சூழ்நிலைகளை நிர்வகித்து அதிகபட்ச சேவையை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பாராளுமன்ற பணியாட் தொகுதியில் நிர்வாக சேவை அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யவிருப்பதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










