பாராளுமன்ற அபிவிருத்தி தொடர்பான சர்வதேச நிபுணர் கெவின் டிவொக்ஸ் சபாநாயகரைச் சந்தித்தார் |
திகதி : | 2023-06-15 |
முன்னாள் கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற அபிவிருத்தி தொடர்பான சர்வதேச நிபுணருமான கெவின் டிவொக்ஸ், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நேற்றையதினம் (ஜூன் 14) பாராளுமன்றத்தில் சந்தித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடாவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கொள்கை நிபுணரும், ஆட்சிமுறை தொடர்பான தலைவருமான சந்திரிகா கருணாரத்ன, சபாநாயகரின் வெளிவிவகார ஒருங்கிணைப்புச் செயலாளர் வைத்தியகலாநிதி சமீர யாப்பா அபேவர்தன ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









